தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் அந்த ரயில்களுக்கு பயணிகளின் ஆதரவு கிடைத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக தமிழகத்தில் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் மற்றும் சென்னை -மைசூர் வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. இந்த நிலையில் இன்று 6 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். அதில் ஒன்று கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயிலையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயங்குகின்றன. இன்று பிரதமர் தொடங்கி வைக்க உள்ள ஆறு வந்தே பாரத் ரயில்கள் பின் வருமாறு
1. கோவை- பெங்களூர்
2. அயோத்யா - ஆனந்த் விஹார் முனையம்
3. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - புதுடெல்லி
4. அமிதசரஸ் - டெல்லி
5. மங்களூர்- மடேகன்