கிருஷ்ண ஜெயந்தியான இன்று கிருஷ்ணரை புகழ்ந்து பலர் பதிவிட்டு வரும் நிலையில் கிருஷ்ணர் மகத்தானவரா? பூர்ண பரமாத்மா கபீர் மகத்தானவரா? என ட்விட்டரில் மோதல் எழுந்துள்ளது.
இன்று கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பலர் சமூக வலைதளங்களில் கிருஷ்ணரின் படங்களை பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிலர் கிருஷ்ணரை பரம்பொருள் என போற்றி வந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள குறிப்பிட்ட சிலர் பூரண பரமாத்மா கபீர் மட்டுமே என கருத்து தெரிவித்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்து மதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கபீர் குறித்து புத்த, ஜைன புத்தகங்களிலும் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது காலம் குறித்த தெளிவற்ற தகவல்களே உள்ள நிலையில் இவரை கடவுளாக வணங்கும் ஒரு சமூகம் உருவாகி சத்லோக் ஆசிரமம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள் கிருஷ்ண பகவான் விஷ்ணுவின் அவதாரம். ஆனால் விஷ்ணு உள்ளிட்ட மூன்று பெரும் கடவுள்களே கபீரிலிருந்து உருவானவர்கள் என பேச பதிலுக்கு கபீர் 1440களில் வாழ்ந்த சாதாரண மனிதர்தான், இறைபக்தியாளரான அவர் ராமர் பக்தர் என்றும் கூறி வருகின்றனர். இதனால் கிருஷ்ணர் Vs கபீர் மோதல் சமூக வலைதளங்களில் வலுத்துள்ளது.