சமீபத்தில் பிரதமர் மோடி ஹைதராபாத்தில் ராமானுஜர் சிலையைத் திறந்துவைத்த நிலையில் இந்த சிலையை காண்பதற்காக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
ஐதராபாத்தில் உள்ள ராம் நகர் என்ற பகுதியில் ராமானுஜருக்கு 216 அடி சிலை வைக்கப்பட்டது. ராமானுஜர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள் ஆனதை அடுத்து 1200 கோடி செலவில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆசிரமத்தின் நடுவே இந்த சமத்துவ சிலை வைக்கப்பட்டுள்ளது
இந்த சிலையை கடந்த 5ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில் இந்த சிலையை காண்பதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ராமானுஜ பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் இந்த சிலையை காண வந்ததாக ஆசிரம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால் இந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது