முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீதான 3 மாட்டுத்தீவன வழக்குகளில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு 13.5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் 4வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பு வெளிவந்துள்ளது.
இந்த வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இன்னொரு முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுவித்துள்ளது.
இந்த வழக்கின் தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் ஏற்கனவே 13.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளதால் அவர் அடுத்த 6 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.