அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி மிகப்பெரிய அளவில் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனத்திற்கு நஷ்டம் அடையும் என்று கூறப்பட்டது. ஆனால் எல்.ஐ.சி வருவாய் பல மடங்கு பெருகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எல்ஐசி யின் வருவாய் கடந்த டிசம்பர் காலாண்டில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக செய்து குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு நிறுவனத்தின் நிகர வருவாய் மற்றும் ரு.6334.20 கோடி என்று தெரிவித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் வெறும் ரூ.235 கோடி தான் வருமானம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத்தில் முடிந்த காலாண்டில் பிரிமியம் வருவாய் மட்டும் ரூ.97,620 கோடியிலிருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 750 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.