Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜிஎஸ்டி குறைப்பதால் மருத்துவ காப்பீட்டு பிரீமியம் உயருமா? மொத்தத்தில் மக்களுக்கு லாபமில்லையா?

Advertiesment
ஆயுள் காப்பீடு

Mahendran

, சனி, 6 செப்டம்பர் 2025 (11:40 IST)
தனிநபர் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் 5% வரை உயரக்கூடும் என ஒரு  கணிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி நீக்கப்பட்ட போதிலும், ஏன் பிரீமியம் கட்டணங்கள் உயர்கின்றன என்பது குறித்து மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 
 
சமீபத்தில், தனிநபர் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, காப்பீட்டு கட்டணங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஜிஎஸ்டி நீக்கப்பட்ட போதிலும், பிரீமியங்கள் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு முக்கியமான காரணம், 'இன்புட் டாக்ஸ் கிரெடிட்' என அழைக்கப்படும் உள்ளீட்டு வரிக் கடன் ஆகும்.
 
காப்பீட்டு நிறுவனங்கள், பாலிசிதாரர்களிடமிருந்து ஜிஎஸ்டி வசூலித்த அதே நேரத்தில், தங்கள் செயல்பாடுகளுக்கு செலுத்திய ஜிஎஸ்டியையும் கழித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருந்தன. இப்போது, பிரீமியம் மீதான ஜிஎஸ்டி பூஜ்ஜியமாக இருப்பதால், உள்ளீட்டு வரி கடனை பெறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகிறது. எனவே பிரிமீயம் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் ஓணம் பண்டிகை.. ரூ.826 கோடிக்கு மது விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி அதிகம்..!