ஊரடங்கால் கொரோனா பரவுதலும், கொரோனா மரணங்களும் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 333,008 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 11,382 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா காரணமாக 321 பேர் பலியாகியுள்ளதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்தியாவில் இதுவரை 1,69,689 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர் என்பது மட்டுமே ஒரு ஆறுதலான செய்தியாகும். மேலும் இந்தியாவில் தற்போது 1,53,760 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நவம்பர் மாதம் மத்தியில்தான் பாதிப்பு உச்சம் தொடும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால் தொற்று பாதிப்பு அளவை 97% இருந்து 69% குறைந்துள்ளது. அதேபோல கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிரிழப்பு 60% வரை தடுக்கப்பட்டது.