பாகிஸ்தான் – குஜராத் எல்லையில் புகுந்துள்ள லட்சகணக்கான வெட்டுக்கிளிகளால் பயிர்கள் நாசமாகியுள்ளன.
பாகிஸ்தான் அருகே உள்ள குஜராத் கிராமங்களில் உள்ள வயல்களில் புகுந்துள்ள லட்சகணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை அழித்து கபளீகரம் செய்து வருகின்றன. வெட்டுக்கிளிகளை அழிக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும், தொடர்ந்து வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில் வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு மக்கள் புதிய வகை திட்டத்தை கண்டறிந்துள்ளனர். வெட்டுக்கிளிகள் உலவும் வயல் பகுதிகளில் மேளக்காரர்களை கொண்டு மேளம், மத்தளம் அடித்து வெட்டுக்கிளிகளை விரட்டி வருகின்றனர். மக்கள் மேளம் அடித்து வெட்டுக்கிளிகளை விரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் வயல்களை அழித்த வெட்டுக்கிளி வகைகளாக இவை இருக்கலாம் என கருதப்படுகிறது.