மதுரை - குஜராத் இடையே இயங்கி வரும் வாராந்திர சிறப்பு ரயில் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் வரை இந்த சிறப்பு ரயில் நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மதுரையிலிருந்து குஜராத் மாநிலம் ஓகா என்ற நகருக்கு வாராந்திர சிறப்பு ரயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் நாளையுடன் முடிவடைகிறது என்று கூறப்பட்ட நிலையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
மதுரை - ஓகா ரயில் (வ.எண்.09520) ஓகாவில் இருந்து வருகிற 7-ந் தேதி, 14,21,28 மற்றும் அடுத்த மாதம் 4,11,18 மற்றும் 25-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது. அதாவது, ஓகாவில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை நண்பகல் 11.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.09519) வருகிற 11-ந் தேதி, 18-ந் தேதி, 25-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ந் தேதி, 8,15,22,29-ந் தேதி ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து வியாழக்கிழமை நள்ளிரவு 1.15 மணிக்கு புறப்படும் ரெயில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணிக்கு ஓகா ரெயில் நிலையம் சென்றடையும்.