விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிர, சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபையில், விவசாயிகளுக்கு முழுமையாக கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மகாராஷ்டிர பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே, ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அந்தத் தொகை வங்களில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.