மகாராஷ்டிராவில் ஆண் போலீஸாருக்கு நிகராக பெண் போலீஸாரும் பணியாற்றி வரும் நிலையில் அவர்களது பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆண், பெண் இருபாலரும் காவல்துறை பணிகளில் உள்ள நிலையில் ஆண்களை போலவே பெண்களும் 12 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர். தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து மராட்டிய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் நாக்பூர், அமராவதி நகரங்களிலும், புனே கிராமப்பகுதியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.