மணிப்பூரின் கலவரத்தின் காரணத்தை அறிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் இனக் கலவரம் நடந்து வருகிறது என்பதும் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மக்களை சந்திப்பதற்காக ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஜூலை 14ஆம் தேதி அனுப்பி வைக்கப்படும் என்று வந்த மம்தா பானர்ஜியின் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மந்தா பானர்ஜி அமைக்கும் இந்த குழுவில் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரெய்ன் தலைமை வகிப்பார் என்றும், இந்த குழு மணிப்பூர் சென்று அம்மாநில மக்களை சந்தித்து கலவரத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பாரதிய ஜனதா அரசு மத்தியிலும் மணிப்பூரிலும் பிரிவினைவாத அரசியல் செய்வதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.