கேரளாவைச் சேர்ந்த வேணுகோபாலன் தனது 8 வருட சிகரெட் சேமிப்புக் காசைக் கொண்டு புதிதாக ஒரு வீடு கட்டியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த வேணுகோபாலன் தனது 13 ஆவது வயதில் சிகரெட் குடிக்க ஆரம்பித்துள்ளார். அதிலிருந்து 60 வயது சிகரெட் அடிமையாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட, மருத்துவர்களிடம் சென்ற போது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறிய அவர்கள், சிகரெட் பழக்கத்தை நிறுத்த சொல்லியுள்ளனர்.
அன்றிலிருந்து சிகரெட்டை விட்ட அவர் தினமும் சிகரெட் குடிக்க ஆகும் செலவை சேமிக்க ஆரம்பித்துள்ளார். அந்த பணம் 8 வருடம் கழித்து அவர் கையில் 5 லட்ச ரூபாயாக இருந்துள்ளது. அதை வைத்து இப்போது தனது வீட்டின் மேலே புதிதாக ஒரு வீட்டைக் கட்டியுள்ளார்.