மணிப்பூர் எதிரான வன்முறை சம்பவம் பற்றி கவிஞர் வைரமுத்து தன் சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக பல ஆண்களால் வன்முறைக்குள்ளான வீடியோ இணையத்தில் வெளியாகி பரவலாகி ஆகி வருகிறது.
இந்த கொடூர சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும் மணிப்பூரில் இணையம் தடை செய்யப்பட்டிருந்ததால் தற்போது தான் இந்த வீடியோ வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வன்முறை சம்பவம் பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி DY. சந்திரசூட் வழக்கறிஞர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார். அதேபோல் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி உச்ச நீதிமன்றத்திற்கும் தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசிற்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் , தமிழ்க் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில்,
தெய்வம் என்பார் பெண்களை;
தேவி என்பார் பூமியை;
கடவுளின் பாகம் என்பார்
பார்வதியை
நடைமுறையில்
உடல் உரிப்பு செய்து
ஊர்வலம் விடுவார்
நம் தலையில் அல்ல
காட்டுமிராண்டிகளின்
தலையில் அடிக்க வேண்டும்
அநியாயங்களை நிறுத்துங்கள்;
அதிகாரம் உள்ளவர்கள்
களமிறங்குங்கள்
இன்னும் மணிப்பூர்
இந்தியாவில்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.