மின்சாரம் என்பது ஆடம்பரம் அல்ல என்றும் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உடனடியாக கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்றும் மேகாலயா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
'மின்சாரம்' என்பது ஆடம்பரம் அல்ல, அவை மக்கள் தேவைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என மின்சார தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் மேகாலயா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்த வழக்கு இன்று மேகாலயா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதான காரணத்தினாலும், தேவைக்கு ஏற்ப வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மாநில அரசு தவறியதாலும் மின் தேவை அதிகரித்துள்ளது, இவை உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் அரசு தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேகாலயாவுக்கு 200 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவை இருக்கும் பட்சத்தில், 80 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும் சூழலில், மின்சார தேவையை போதுமான அளவு உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.