மேகாலயாவில் பிரபல பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறை எடுத்த நடவடிக்கையில் பயங்கரவாதியாக அறியப்பட்ட செரிஸ்டர்பீல்டு தாங்யூ என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து மேகாலயாவின் 4 மாவட்டங்களில் பெரும் கலவடம் மூண்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களை முன்வைத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அம்மாநில உள்துறை அமைச்சர், செரிஸ்டர்பீல்டு கொல்லப்பட்டது குறித்த வெளிப்படையான விசாரணை தேவைப்படுவதாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் கன்ராட் சங்மாவின் இல்லத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.