தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது எடுத்து தமிழ்நாடு உள்பட நான்கு மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதும் வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய நான்கு மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழைப்பு வாய்ப்பு என்றும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வானிலை அறிவிப்பு வெளியானதில் இருந்தே கேரளா உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்றும் சில பகுதிகளில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதையும் பார்த்தோம்.