இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவுக்கு உதவ பல நாடுகள் நேசகரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் நிலை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா “இந்தியாவின் தற்போதைய சூழலால் மனம் உடைந்தேன். அமெரிக்க அரசு இந்தியாவிற்கு உதவ முன்வந்ததற்கு நன்றி. மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் சாதனங்களை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து உதவும்” என தெரிவித்துள்ளது.