மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளரிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மை கொடுக்கவில்லை என்றார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என்றும் அவர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மம்தா கூறினார். இவ்வளவு அட்டூழியங்கள் செய்த பிறகும், இவ்வளவு பணம் செலவழித்த பிறகும், மோடி மற்றும் அமித்ஷாவின் வியூகம் தோற்றுவிட்டது என்று அவர் விமர்சித்தார்.
பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும் மோடிக்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு கட்டாயம் தேவை என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.