சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ModijiDontMakeUsFoolAgain என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் முடிவடைந்துள்ளது. இதனால் பிரதமர் மோடி நேற்று மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, ஏப்ரல் 5 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்றும் அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
மோடி அதை பேசுவார் இதை பேசுவார் என பெரிதாக எதிர்ப்பார்த்த நிலையில் கடைசியில் விளக்கை ஏற்ற சொல்லிவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களுக்கு கேலிக்கு உள்ளாகியுள்ளது. அந்த வகையில் தற்போது #ModijiDontMakeUsFoolAgain என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிடப்படும் சில மீம்கள் இதோ...