கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மத்திய பிரதேசத்தில் 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் சற்று குறைந்துள்ள சூழலில் டெங்கு காய்ச்சல் வடிவில் அடுத்த ஆபத்து வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மத்திய பிரதேசத்தில் 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதனால், அங்கு மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 38 நோயாளிகள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.