உடல் நலமில்லாத கணவருக்கு அவரது மனைவி மாதம் பத்தாயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வருமானம் ஈட்ட முடியவில்லை என்றும் அதனால் தான் மனைவி தனக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் சமீருக்கு அவரது மனைவி மாதம் பத்தாயிரம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சமீரின் மனைவி மேல்முறையீடு செய்த நிலையில் தன்னுடைய வேலையை தான் ராஜினாமா செய்து விட்டதாகவும் அதனால் தன்னால் ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்றும் வாதிட்டார்
ஆனால் அவரது வாதத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் மாதம் பத்தாயிரம் ரூபாய் கணவனுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்பதை உறுதி செய்தது. வேலையை ராஜினாமா செய்த போதிலும் அவருக்கு வருமானம் இருப்பது உறுதி செய்துள்ளதால் வருமானம் இல்லாத கணவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது