மும்பையில் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கண்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவை தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பெரியோர் மட்டுமல்லாமல் சிறுவர்களும் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் மும்பை ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் கரும்பூஞ்சை தொற்றால் மூன்று குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4,6 மற்றும் 14 வயதுடைய அவர்களுக்கு கரும்பூஞ்சை தொற்று அதிகரித்திருந்த நிலையில் அது மூளையை தாக்காமல் இருக்க அவர்களது கண்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சிறு வயதிலேயே குழந்தைகள் கண்களை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.