மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் முதன்முறையாக 61 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மும்பையில் செயல்பட்டு வரும் பங்குசந்தை இந்தியாவின் ஷேர்மார்க்கெட் வாங்கல், விற்பனையில் முக்கிய தளமாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டுக்கு நிகராக மும்பை பங்குசந்தை இந்தியாவிற்கு உள்ளது.
இந்நிலையில் இன்று முதன்முறையாக மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 61 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இன்று காலை சென்செக்ஸ் 370 புள்ளிகள் உயர்ந்து 61,107 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதுபோல தேசிய பங்குசந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 104 புள்ளிகள் உயர்ந்து 18,266ஆக வணிகம் ஆகி வருகிறது. இது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.