முஸ்லீம் சமூகத்தினர் மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என 20க்கும் மேற்பட்ட முஸ்லீம் தலைவர்கள் கையெழுத்திட்டு மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்பதற்கு முன்னர் பாஜகவினருக்குக் கூறிய அறிவுரையில் சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறவேண்டும் எனக் கூறினார். இந்நிலையில் ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலனா மஹ்மூத் மதானி, டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கமால் ஃபரூக்கி, ஹைதரபாத்தில் கல்வி நிறுவன தலைவரான டாக்டர் ஃபக்ருதீன் முகமது, முன்னாள் வருமான வரித்துறை ஆணையர் குயாசிர் ஷாமின் உள்ளிட்ட முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து மோடிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் முக்கியமாக ‘ முஸ்லிம் சமூகத்துடன் மத்திய அரசு அதிகமாக உரையாடல்களை நடத்த வேண்டும். அனைத்தையையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் முஸ்லீம்களும் இடம்பெற வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளனர்.