மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராக சுறுசுறுப்பாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு சற்று தாமதமாக ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஆங்கிலம் இந்தி உள்பட 11 மொழிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது
இந்த தேர்வில் வழக்கமாக நீட் தேர்வுக்கு கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு குறித்து விளக்கம் தெரிந்து கொள்ள விரும்புவோர் https://nta.ac.in அல்லது https://ntanett.nic.in ஆகிய இணையதளங்களுக்கு செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது