Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மீண்டும் ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி.. 100% வாக்குகளுடன் போட்டியே இல்லை..!

மீண்டும் ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி.. 100% வாக்குகளுடன் போட்டியே இல்லை..!

Siva

, வியாழன், 25 ஜூலை 2024 (07:03 IST)
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி மீண்டும் போட்டியின்றி 100 சதவீத வாக்குகளுடன் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

33வது ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா உள்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 142 வது கூட்டம் நடைபெற்ற நிலையில் இதில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி கலந்து கொண்டார்.

அப்போது இந்தியாவின் உறுப்பினராக அவர் போட்டியின்றி நூறு சதவீத வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தேர்வு செய்த பின் நீடா அம்பானி செய்தியாளர்களிடம் பேசிய போது ’சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு பெருமை தான். இந்த கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகிழ்ச்சியை, பெருமையான தருணத்தை நான் ஒவ்வொரு இந்தியருடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவிலும் உலகெங்கிலும் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கப் போகிறேன்’ என்று தெரிவித்தார்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட்டதே தமிழக அரசுதான்: மத்திய அமைச்சர்..!