ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் சத்ய பால் மாலிக் எங்களுடைய ஆதரவாளர் ஆதரவாளர் என்று மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக, மாநில ஜனநாயக கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. ஆளுநர் ஆட்சி தொடங்கியது.
இதைத்தொடர்ந்து ஆளுநர் என்.என்.வோஹ்ரா மாற்றப்பட்டார். அண்மையில் சத்ய பால் மாலிக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் அம்மாநில பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா, ஆளுநர் குறித்து கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
முன்னாள் ஆளுநர் என்.என் வோஹ்ரா தனது கருத்தில் நிலையாக இருந்ததால் தான் அவரை மாற்றினோம். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னர் சத்ய பால் மாலிக் எங்களுடைய ஆதரவாளர்தான் என்று கூறியுள்ளார்.