இன்றைய மீடியாக்களின் மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும் விளம்பரங்கள் தான் மீடியாக்களுக்கும், பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும் பெரிய வருமானத்தைப் பெற்றுத் தருகிறது. மக்களிடம் பொருட்களைக் காட்டும்போது,அவர்களின் ஆசைகளைத் தூண்டி அதை வாங்கும் வகையில் விளம்பரங்களை அதிக செலவில் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் பிரபலமான 5 ஸ்டார் சாக்லேட் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு முதாட்டி இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவர் அருக்கு பத்து அடிகள் தள்ளி ஒரு இளைஞர் நின்று கொண்டு 5 ஸ்டார் சாக்லேட்டை ருசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மூதாட்டியின் ஊன்று கோல் தவறி முன்னால் விழுந்து விட்டது. அவர், இளைஞரிடம், அதை எடுத்துத் தரும்படி கூறுகிறார். ஆனால் இளைஞர் சரி என்று கூறி தொடர்ந்து சாக்லெட் சாப்பிடுகிறார்.
மூதாட்டி அவரை பார்த்து இனிமேல் நாமே எடுத்துக் கொள்ளலாம் என நினைத்து இருக்கையை விட்டு மேலே எழுந்து வந்து ஊன்று கோலை எடுக்கும்போது, அவர் அமர்ந்திருந்த இடத்தில் மேலிருந்து ஒரு பியானோ கீழே விழுந்து உடைகிறது.
பாட்டி, இளைஞருக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
இதனை, ஒரு தரப்பினர் இது புதிய சிந்தனை எனப் பாராட்டுகின்றனர். இந்த காலத்து இளைஞர்கள் மரியாதை குறைவாக நடந்து கொள்வார்கள் என விமர்சித்து வருகின்றனர்.
இந்த வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.