உர்ஜித் படேல் செய்ததை அடுத்து ஒடிஷாவைச் சேர்ந்த சக்திகாந்த தாஸ் (63) ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கபட்டுள்ளார்.இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார் என்று கூறப்படுகிறது.
பரவலாக அறியப்பட்ட உர்ஜித் பட்டேலின் ராஜினாமாவால் மத்திய அரசு சிறிது திணறியது. இந்நிலையில் அடுத்த வருடம் தேர்தல் வரவுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ஆளூநர் இல்லாமல் இருப்பது தேசத்தில் பொருளாதார சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று அமைச்சரவைகூடி முக்கிய முடிவு எடுத்து சக்திதாஸை புதிய கவர்னராக நியமித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாக சக்திகாந்த தாஸ் பொருளாதார விவகாரத்துறை செயலராக இருந்தவர். தற்போது 15வது நிதிக் குழுவின் உறுப்பினர் இருக்கிறார்.
தமிழகத்தில் தொழில்துறை முதன்மை செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.