நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நீங்கள் எதிர்பார்த்ததை செய்யவில்லை என பதிலளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர் ஒருவர் நடுத்தர மற்றும் மாத சம்பளம் வாங்கும் வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் நல்லது இருக்கும் என்று எதிர்பார்த்தோம் என்றும் ஆனால் அந்த எதிர்பார்ப்பு பட்ஜெட்டில் இல்லை என்றும் கூறினார்
அப்போது அவர் நீங்கள் என்ன எதிர் பார்த்தீர்களா அது இல்லை என்றும் வரியை அதிகரிப்போம் என்று நீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள் ஆனால் நாங்கள் வரியை அதிகரிக்க வில்லை என்று பதிலளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ 3லட்சம் ஆக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் என்பதே தொடரும் என்று நேற்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது