தற்போது நடந்து வரும் மக்களவை பட்ஜெட் கூட்ட தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.
அதில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கான பல திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.
சிறு மற்றும் குறு தொழில் செய்யும் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளுக்கான பணத்திற்காக வங்கிகளை நம்பியே உள்ளன. இந்நிலையில் வங்கியில் அவர்கள் சில லட்சங்கள் பெறுவதற்கே மாத கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் விண்ணப்பித்த ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி வரை கடன் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் முனைவோர் எளிதில் கடன் பெற முடியும்.