பொருளாதார வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் அறிவிக்காததை நடவடிக்கை எடுக்க வேண்டியது இருந்தால் அதற்கும் தயாராக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி, பாராளுமன்றத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் நடந்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட் பங்கு மதிப்பு, பத்திரங்கள், பண சந்தைகள் ஆகியவற்றின் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார்.
மேலும் அவர், பொருளாதார வளர்ச்சிக்காக பட்ஜெட்டுக்கு அப்பாலும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தால் அதற்கும் தயாராகவே இருக்கிறோம்” என கூறியுள்ளார்.