மின்சார வாகனங்களுக்கு சாலை வரியும், பதிவுக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகம் நவீனமயமாகிவிட்டது. எனவே மனிதர்கள் தொழில்நுட்பங்களுக்கு தங்களை மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெட்ரோல் வாகனங்களுக்குப் பதில், மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர்,வரும் 2024 ஆம் ஆண்டு புது வாகனங்களின் 25% விழுக்காடு மின்சார வாகனங்களாகத்தான் இருக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், மின்சார வாகனங்களுக்கு சாலை வரியும், பதிவுக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது எனவும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு சுமார் 30 ஆயிரமும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மானியமாக அரசுசார்பில் வழங்கப்படும் எனக் கூறினார்.