Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்
, சனி, 28 ஏப்ரல் 2018 (19:21 IST)
டெல்லியில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் உதவி கிடைத்துள்ளது.

 
 
பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவார் ராஜா சிங் புல். இவர் கடந்த 1960-ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். அப்போது தனது சகோதரருடன் சேர்ந்து இருசக்கர உதிரி பாகங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். 
 
ஒரு நாள் திடீரென அவரது சகோதரர் மாரடைப்பில் இறந்துள்ளார். இதனால் அவரால் தொழிலை கவனிக்க முடியவில்லை. அதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு நிறுவனம் திவால் ஆகியது. மேலும் அவரது சொத்துகளான வீடு, நகை, நிலங்கள் அனைத்தும் அவரது கையை விட்டு போனது.
 
இதன்பின்னர் அவர் டெல்லி ரயில் நிலையத்தின் வெளியே தங்கினார். அங்குள்ள விசா விண்ணப்பிக்கும் மையத்தில்  விண்ணப்பிக்க வருபவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தனது வயிற்றை நிரப்பியுள்ளார். பலர் அவரிடம் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பட்டம் பெற்றவர் ஏன் சாலையில் தங்க வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் பல நிறுனவங்களுக்கு இண்டர்வியூ சென்றுள்ளேன் என்றார். மேலும், தனது பிள்ளைகள் இங்கிலாந்தில் வசிப்பதாகவும், அவர்களுக்கு நான் உயிருடன் உள்ளேனா என்று கூட தெரியாது என கூறினார்.
 
இவரது புகைப்படத்தை அவினாஷ் சிங் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுருந்தார். இதனை கண்ட அனைவரும் அவருக்கு உதவி செய்து வருகின்றனர். தற்போது அவருக்கு வீடு கிடைத்துள்ளது. ஆனாலும், அவர் தன் விசா விண்ணப்பிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி