உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் நுழைந்தது என்பது தெரிந்ததே. இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் மத்திய மாநில அரசுகள் இணைந்து கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு முதன் முதலாக பெங்களூருவைச் சேர்ந்த முகமது சித்திக் என்பவர் பலியானார் இதனை அடுத்து கர்நாடக மாநிலம் சுதாரித்து கொரோனாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பெங்களூரில் இதுவரை மொத்தம் 13 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கர்நாடக மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14க உயர்ந்துள்ளது
இதனையடுத்து கர்நாடகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது