தற்கால இளைஞர்கள் ஒரு ரூபாய் நோட்டை பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும் புழக்கத்தில் இருந்த ஒரு ரூபாய் நோட்டுக்களும் கிழிந்து காலாவதி ஆனதால் யாரும் ஒரு ரூபாய் நோட்டை தற்போது கண்களால் பார்க்க முடிவதில்லை
இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.,500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அறிமுகம் செய்த நிலையில் தற்போது விரைவில் ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க உள்ளதுஅ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒரு ரூபாய் நோட்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட மாட்டார். அவருக்கு பதிலாக பொருளாதார விவகாரத்துறைச் செயலாளர் சக்தி காந்த தாஸ் கையெழுத்து இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. புதிய ஒரு ரூபாய் நோட்டு சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.