ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதை அடுத்து மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தலைவர் திரௌபதி முர்மு உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.