நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் முழுவதுமே எதிர்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரில் ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாஜக எம்பிகளும், அதானி குழும நிறுவனங்கள் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த அமளி காரணமாக தினந்தோறும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.