திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்துள்ளதாக சர்ச்சைக்குரிய தகவல் வெளியான நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தேசிய அளவில் சனாதன தர்ம ரக்ஷணா வாரியம் அமைக்கப்பட்டு நாடு முழுவதில் உள்ள கோயில்களில் இது போன்ற பிரச்சனைகள் ஆய்வு செய்யப்படும் என்று கூறினார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. எந்த வகையிலும் சனாதன தர்மம் அவமதிக்கப்படுவதை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறேன், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இதுபோன்ற பிரச்சனைகளை ஆய்வு செய்ய, தேசிய அளவில் சனாதன தர்ம ரக்ஷணா வாரியம் அமைப்பதற்கான நேரம் இது என்று கூறினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் கொடுத்த முண்டை ஆட்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர மாநில அரசு வட்டாரங்கள் கூறுகின்றன இது ஆந்திர மாநில அரசியலை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது