தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர்கள் யார் என்பதை அறிய மக்களுக்கு உரிமை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்துள்ளது.
தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் மத்திய அரசு இன்று எழுத்துப்பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இந்த வாதத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர்கள் யார் என்பதை அறிய மக்களுக்கு உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் யார் நிதி வழங்குகிறார்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவது யார் யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.