நேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சிலர் சாலையில் பீர் குடித்துக்கொண்டு ஆடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவலாகிவருகிறது.
ஆன்மீக விழாக்களில் பெரும்பாலும் அமைதியாக நடைபெறுவதே வழக்கம். மக்களும் ஏராளமானோர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிப்பார்கள். அதிலும் மிகச் சிறப்பான நிகழ்ச்சியாக இருந்தால் மக்களும் கொண்டாடுவார்கள்.
செப்டம்பர் ஒன்றுமுதல் சாலையில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர், மாணவர்கள் வாகனங்களை இயக்கினால், காரில் செல்லும் போது கார் பெல்ட் போடாமல் போனால் முதலில் இருந்த அபராதத்தைவிட அதிக அபராதம் அறிமுகப்பட்டது.
இந்நிலையில் நேற்று குஜராத் மாநிலம் சூரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது, சிலர் சாலையிலேயே மதுமானம் குடித்துவிட்டு ஆடிக்கொண்டிருந்தனர். இதுசம்பந்தமான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி போலீஸார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.