ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில் 5ஜி உள்ளிட்டவை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியை மக்களிடையே எளிதாக கொண்டு சென்று லாபம் ஈட்டும் நிறுவனமாக ரிலையன்ஸ் விளங்கி வருகிறது. ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தின் டேட்டா ப்ளான்கள், அதிவேக இணைய வசதி, 4ஜி, மலிவு விலை போன் ஆகியவை மக்களிடையே பிரபலமாகின.
அதேபோல தற்போது ஜியோ நிறுவனம் ஜியோ ஃபைபர் போன்றவற்றின் மூலம் அதிவேக இணைய சேவை வழங்குவதின் மூலமாகவும் ஜியோ நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து இன்று தொடங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தற்போது கொரோனா காரணமாக பலர் வீடுகளிலிருந்து பணிபுரியும் சூழலில் குறைந்த விலை லேப்டாப்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும், 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.