இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமான அளவில் குறைக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போது கூட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்றும் இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபத்தை பெற்று வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1. 88 குறைக்கப்பட்டு ரூபாய் 100.75 என்ற விலையில் விற்பனை ஆகிறது. அதேபோல் டீசல் விலை 1.90 காசுகள் குறைக்கப்பட்டு ரூபாய் 92.34 என விற்பனை ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்புக்கு தேர்தல் காரணம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.