கேரள அரசு ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின் என்ன செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு முடிந்த நிலையில் மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள உள்ள ஊரடக்கின் போது கடைபிடிக்கவேண்டிய சில நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
மேலும், ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு மேல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் எனவும் அறிவித்தது. இந்நிலையில் கேரள அரசு ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின் என்ன செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
ஆம், ஏப்ரல் 20-க்கு பிறகு கட்டுபாடுகளுடன் ஊரடங்கு தளர்வு செய்யப்படும் மாவட்டங்களில் ஒன்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் வாகனம் ஓட்டி வந்தால் இந்த விதியில் சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.