அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் ”பிரலே” ஏவுகணை முதல் சோதனையிலேயே வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் ராணுவ பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சமீப ஆண்டுகளாக இந்தியாவிலேயே முழுவதும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டும் வருகின்றன. முன்னதாக பிரமோத், ப்ரித்வி, அக்னி போன்ற ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன.
அதை தொடர்ந்து தற்போது அணு ஆயுதம் தாங்கி செல்லும் “பிரலே” ஏவுகணை சோதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் அப்துல்கலாம் தீவிலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 டன் அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய இந்த ஏவுகணை 500 கி.மீ தூரம் பயணிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.