Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
, ஞாயிறு, 24 ஜூலை 2022 (11:08 IST)
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. 


அமெரிக்காவின் ஓரிகான் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்திய ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா தலைமையில் இந்திய தடகள அணி இந்த போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா, அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோர் இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அதில், 88.13 மீட்டர் தூரம் எரிந்து நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.40 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற நீரஜ் உலக தடகளத்தில் வெள்ளி வென்றுள்ளார்.

19 ஆண்டுகளுக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக பதக்கம் வென்றுள்ளது இந்தியா. 2003 ஆம் ஆண்டு அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்ற பிறகு 19 ஆண்டுகளாக இந்தியா பதக்கம் பெறாமல் இருந்தது என்பது கூடுதல் தகவல்.

இதனைத்தொடர்ந்து உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றது இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு சிறப்பான தருணம் என புகழாரம் சூட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி: என்ன காரணம்?