இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி சர்வதேச நாணய நிதியிடம் பிச்சை பாத்திரத்தை ஏந்தி வருகிறது என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியா அபரிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது என்றும் ஆனால் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன் உதவிகள் மூலம் மெல்ல மெல்ல மீண்டும் வந்தாலும் இன்னும் அந்நாடு பிச்சை பாத்திரம் ஏந்தி வருகிறது என்றும் கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்கு தொல்லை அளிப்பதையே பாகிஸ்தான் முக்கிய வேலையாக கொண்டிருந்தது என்றும் அதனால் தான் தற்போது அதன் கையால் பிச்சை பாத்திரம் இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியாவில் வலுவான அரச அமையும் போது எதிரிகள் நடுங்குவார்கள் என்றும் நாட்டிற்கு எதிரான ஆபத்தான செயல்களில் ஈடுபட தயங்குவார்கள் என்றும் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
தேசத்துக்கு எதிரானவர்களை ஒவ்வொரு இந்தியர்களும் அறிவார்கள் என்றும் ஒவ்வொரு இல்லத்திலும் மீண்டும் மோடி ஆட்சி என்ற குரல் ஒலித்து வருகிறது என்றும் அவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.