உலகின் பழமையான மொழி தமிழ் என பிரான்ஸ் நாட்டில் தமிழ் மொழியின் பெருமையை பிரதமர் மோடி பேசியுள்ளார்
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் நடந்த இந்திய அம்சாவளியினர் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியபோது 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சின் பெருமையை காக்கும் வகையில் கடமையாற்றிய இந்திய வீரர்கள் உயிரிழந்ததை நினைவு கூர்ந்தார்.
மேலும் உலகின் பழமையான மொழி தமிழ் மொழி தான் என்று குறிப்பிட்ட அவர் உலகின் பழமையான மொழி இந்தியாவில் உள்ளது என்பதை தவிர வேறு என்ன பெருமை வேண்டும் என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்படும் என்று கூறிய அவர் இதை இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன் என்றும் கூறினார். ஐந்து ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார நிலையை இந்தியா விரைவில் எட்டிப் பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து