யூ-டியூப்பில் இரண்டு கோடியை சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் யூ-டியூப் சேனலில் இரண்டு கோடி சப்ஸ்க்ரைபர்கள் குவிந்துள்ளனர். மேலும் அவரது யூடியூப் பக்கம் 450 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.
சமகால அரசியலில் டிஜிட்டல் தகவல் தொடர்புகளை அதிகம் பயன்படுத்தும் தலைவர்களில் ஒருவராக இருக்கும் பிரதமர் மோடி யூட்யூபை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார். அரசாங்க முன் முயற்சிகள், கொள்கைகள் குறித்த தகவல்கள் அவரது யூ-டியூப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் உலக அளவில் இரண்டு கோடி சந்தாதாரர்களை பெற்று அவருடைய பிரதமர் மோடியின் யூ-டியூப் சேனல் சாதனை செய்துள்ளது.. பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக பிரேசில் அதிபர் இரண்டாவது இடத்திலும், உக்ரைன் அதிபர் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அமெரிக்க அதிபர் நான்காவது இடத்திலும் கனடா பிரதமர் யூ-டியூப் சேனல் பத்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது